என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கைது நடவடிக்கை
நீங்கள் தேடியது "கைது நடவடிக்கை"
அரூர் அருகே பணத்தகராறில் ஓட்டல் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.
அரூர்:
தர்மபுரி மாவட்டம் அரூர் மேல்பாட்சாபேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30), ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி அருள்மொழி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் கடந்த பிப்ரவரி மாதம் அரூர் தில்லை நகரை சேர்ந்த யோகானந்தம் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். கடன் வாங்கிய பணத்தை யோகானந்தம் திரும்ப கொடுக்குமாறு சுரேஷிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் சாக்குப்போக்கு கூறி வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே அவர்களுக்குள் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் யோகானந்தம், இவரது மனைவி எழிலரசி உள்ளிட்ட 4 பேர், சுரேஷ் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனால் சுரேசின் மனைவி அருள்மொழி, உறவினர்களை அழைத்து வர சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்த போது சுரேஷ் மற்றும் யோகானந்தம் உள்ளிட்டவர்களை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அருள்மொழி பல்வேறு இடங்களில் தேடியும் சுரேஷ் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை அரூர் அருகே உள்ள புறாக்கல் உட்டை பகுதியில் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக அரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது பிணமாக கிடப்பது சுரேஷ் என தெரியவந்தது. மேலும் சுரேஷ் கல்லால் தாக்கி படுகொலை செய்து இருப்பது தெரிந்தது.
இது குறித்து சுரேசின் மனைவி அருள்மொழி அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் யோகானந்தம், அவருடைய மனைவி எழிலரசி உள்ளிட்ட 4 பேர் சுரேசை அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பணத்தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்துவோர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்படும் நிலை உள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி ஆட்சிக்கு தேவையில்லாத கெட்ட பெயர் ஏற்படுவதை தடுப்பதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையாக சென்னையை பொறுத்தமட்டில் தற்போது போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்துவோர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படும் நிலை உள்ளது.
சமீபத்தில் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். பூங்கா ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டோர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று சென்னை நகர போலீசார் தெரிவித்தனர்.
பொதுவாக ஒரு போராட்டம் அறிவிக்கப்பட்டால் இனிமேல் அந்த போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் யார், யார்? அதன் பின்னணியில் இருந்து யாராவது வன்முறையை தூண்டி விடுகிறார்களா? என்பது குறித்து தற்போது மத்திய-மாநில உளவுப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். #tamilnews

ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மீது தேவையில்லாமல் போலீஸ் மூலம் கைது நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்தும், தேவையற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும், சிவகங்கையில் உள்ள கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில பொதுச் செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஏராளமானோர் பணிகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்த பொதுச் செயலாளர் கணேசன் பேசும்போது, மாவட்ட கூட்டுறவு துறை சமீபகாலமாக மத்திய வங்கி பணியாளர்கள் மீது வேண்டுமென்றே வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஏற்படும் இழப்புகளுக்கு அந்தந்த சங்கமே பொறுப்பாகும். இதற்கு மத்திய வங்கி ஊழியர்களும், கள ஆய்வாளர்களும் நேரடி பொறுப்பாகமாட்டார்கள். ஆனால் வீண் பழி சுமத்துவதற்காக மத்திய வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே உடனடியாக கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
ஆர்ப்பாட்ட முடிவில் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

போளூர் அருகே குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி கொலை செய்யப்பட்டதில் கைது நடவடிக்கைக்கு பயந்து 11 கிராமங்கள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
போளூர்:
சென்னை பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் ருக்மணி (65), இவரும் வெங்கடேசன் (வயது51). மயிலாப்பூர் கஜேந்திரன் (55) உறவினர் மலேசியாவை சேர்ந்த மோகன்குமார் (34) சந்திரசேகர் ஆகியோரும் காரில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தண்ணீர் குளம் என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
அப்போது தம்புகொட்டான் பாறை கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு ருக்மணி சாக்லெட் கொடுத்தார்.
அங்கிருந்த பெண்கள், குழந்தையை கடத்த சாக்லெட் கொடுப்பதாக கருதி கூச்சல் போட்டனர். அங்கு திரண்ட கிராம மக்கள் ருக்மணி உள்பட 5 பேரையும் சரமாரி தாக்கினர். இதில் சிகிச்சை பலனின்றி ருக்மணி இறந்தார். மற்ற 4 பேரும் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் செல்போனில் எடுத்த வீடியோ ஆதாரத்தை வைத்து மூதாட்டி மற்றும் மற்றவர்களை தாக்கியவர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.
அதன்படி தம்பு கொட்டான் பாறை, களியம் வேடகொள்ளை மேடு கிராமத்தை சேர்ந்த 25 பேரை கைது செய்தனர்.
மேலும், சந்தேகிக்கப்படும் 200 பேரை பேலீசார் தேடி வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளை பூட்டிக் கொண்டு இரவோடு இரவாக தலைமறைவாகினர். கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது.
அத்திமூர், கணேசபுரம், தம்புகொட்டான் பாறை, களியம், காமாட்சிபுரம், திண்டிவனம், இந்திராநகர், ஜம் பங்கிபுரம், தாளியார், காந்திநகர், ஏரிக்கொல் லைமேடு ஆகிய 11 கிராமங்கள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அந்த கிராமங்களில் போலீசார் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
போளூர் பஸ் நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பதுங்கி உள்ளனரா? என்று போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலும் 4 பேர் அபாய கட்டத்தை கடந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் எதுவும் ஊடுருவவில்லை. பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சைபர் கிரைம் போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் ஆய்வு செய்ததில் குழந்தை கடத்தல் கும்பல் மாவட்டத்தில் எங்கும் இல்லை.
குழந்தை கடத்தல் கும்பல் என்று சமூக வலை தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பினால் அவர்களும் குற்றவாளிகளாக கருதி குண்டர் சட்டம் அல்லது அதற்கு நிகரான வழக்கில் கைது செய்யப்படுவார்கள்.
மேலும், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்றார்.

×

X